சென்னை:
தளபதிக்கு பிறந்த நாள்... ஆனா அவரோ ஷீட்டிங்கில் பிஸி. பிறகென்ன அங்கேயே கேக் வர்ற அதை வெட்டி கொண்டாடிட்டாரு. 


சமூகவலைத்தளங்களில் அவருக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் வாழ்த்து மாலை போட்டு திணறடித்து வருகின்றனர். இன்னும் தலைப்பு வைக்காத பரதன் படத்தில் நடித்து வரும் தளபதி அங்கு தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.


இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது மனைவியுடன் வந்து வாழ்த்துக்கள் சொன்னார். இதுல இயக்குனர் பரதன், நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் படக்குழுவினர் கலந்துக்கிட்டாங்க.


இருந்தாலும் தளபதியோட ரசிகர்கள் கொஞ்சம் நொந்து போனாலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை விட்டு கொடுக்கலையே... அவங்க தங்கள் பாணியில் கொண்டாடி தீர்த்துக்கிட்டு இருக்காங்க... பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி.


మరింత సమాచారం తెలుసుకోండి: