சென்னை:
"துருவா" படப்பிடிப்பு காஷ்மீரில் பரபரவென நடந்து வருதாம். இந்த படம் தன் கேரியரில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று நம்புகிறாராம் அந்த இளம் ஹீரோ.
தமிழில் தனி ஒருவனாக பரபரத்த படம் தெலுங்கில் "துருவா"வாக மாறியிருக்கு. இதில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண்தான் ஹீரோ. இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீரில் கிடுகிடுவென வளர்ந்து வருகிறது. நாயகி ராம்சரணின் ராசி நாயகியான ரகுல்ப்ரீத்சிங்தான்.
அப்ப வில்லன் "டப்" கொடுக்கிற ஆளாக இருக்கணுமே என்று கேட்கிறீர்களா? வேறு யாரு நம்ம அரவிந்த்சுவாமிதான் அவரு. தனி ஒருவனை விட துருவாவில் டபுள் மடங்கு சைலண்ட் வில்லத்தனம் செய்யறார் என்று சொல்றாங்கப்பா... இந்த படம் தன் கேரியரில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று ராம்சரண் நம்புகிறாராம். கதை அப்படிப்பா... நினைத்தது நடக்கும்.