சென்னை:
இவரால்தான் நான் இந்த இடத்தில் இருக்கிறேன்... சொன்னதால் சர்ச்சை கிளம்ப...சிண்டு முடியாதீர்கள் என்று பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.


என்ன விஷயம் என்றால்... ரெமோ பர்ஸ்ட் லுக் விழாவில் பேசிய விக்னேஸ்சிவன் நான் இந்த இடத்தில் இருக்க அனிருத்தான் காரணம் என்று ஓப்பன் டாக் செய்தார்.


இதை கேள்விப்பட்ட சிம்பு ரசிகர்கள்... அப்ப எங்காளுதானே உங்களுக்கு முதல் வாய்ப்பு கொடுத்தது என்று கொந்தளிக்க... பற்றிக் கொண்டது கோலிவுட்.


இதற்கு விக்னேஸ்சிவன் எனக்கும் சிம்புவிற்கு நல்ல நட்பு இருக்கிறது. என்னை பாடலாசிரியராக அறிமுகம் செய்தது அனிருத். அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன். இதை பிரச்னை ஆக்காதீர்கள் என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 


சிம்பு தரப்பும், ‘விக்னேஷ் சிவன், சிம்பு மீது மிகுந்த மரியாதை கொண்டவர், இதை பிரச்னை ஆக்க வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனராம்.


Find out more: