மும்பை:
அவர்தானா? உண்மையில் அவர்தானா என்று பாலிவுட்டே நம்ப மறுக்கிறது இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து. என்ன விஷயம் தெரியுங்களா?


கிரிக்கெட் வீரர் விராட்கோலியும், நடிகை அனுஷ்காசர்மாவும் காதலை புதுப்பித்துக் கொள்ள நடிகர் சல்மான்கான்தான் காரணம் என்று தெரியவந்துள்ளதுதான். 


சல்மான் ஒரு காதல் மன்னன் என்றுதான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இந்த விஷயத்தை நம்பித்தான் ஆகவேண்டும். 
அனுஷ்காவின் பிரிவுக்கு பின் பலமுறை காதலை புதுப்பிக்க விராட் முயன்றுள்ளார். ஆனால் எல்லாம் எல்லைக் கோட்டைக்கூட தொடாத பந்துகளாக போய்விட்டன. 


தற்போது மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். சில கண்டிஷன்களுடன் அனுஷ்கா காதலரை ஏற்றுக் கொண்டிருக்கிறார். 
இவர்கள் பிரிய காரணமாக இருந்ததாக கூறப்பட்ட சல்மான் தான் இருவரையும் சேர்த்து வைத்தவராம். எப்படி தெரியுங்களா?


சுல்தான் படத்தின் ஹங்கேரியா படப்பிடிப்பில் அனுஷ்காவிடம் சல்மான் பல அறிவுரைகள் கூறியுள்ளார். இதில்தான்து மனசு மாறி விராட்கோலியுடன் அனுஷ்கா மீண்டும் இணைந்தாராம். அப்படிங்களா? இது உண்மைதான் என்கிறது விபரமறிந்த வட்டாரங்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: