சென்னை:
மாறிட்டாராமே... மாறிட்டாராமே... தமிழ்நாடு மற்றும் கேரளாவை சுழற்றி அடித்து வருகிறது இந்த செய்தி... இது செய்தியா... இல்லை வதந்தியா? விஷயம் இதுதாங்க...


கே.ஜே.ஜேசுதாஸ் என்றால் அறியாதவர் யாரும் இருக்க முடியாது.பிரபல பின்னணி பாடகரான இவர் இந்து மதத்திற்கு மாறிவிட்டார் என்று வெளியான தகவல்தான் இரு மாநிலத்தையும் பரபரப்புக்கு உள்ளாக்கியது.


 பல மொழிகளில் பிரபலமானவர் பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ். இவர் கிறிஸ்தவர் ஆவார். ஆனால் இவர் மூகாம்பிகை கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கத்தை கொண்டவர். மேலும், சுவாமி ஐயப்பன் உட்பட பல இந்து கடவுள்கள் குறித்து பல பக்தி பாடல்களைபாடி இந்துக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவர்.


இந்த நிலையில்தான் இவர் இந்து மதத்திற்கு மாறியதாக தகவல் இறக்கை கட்டி பறந்தது. உண்மை நடந்து வந்தால் வதந்தி பிளைட் பிடித்து வந்து சேர்ந்து விட்டது. 


இந்த செய்திக்கு இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது பாஜ எம்பி சுப்பிரமணியன் சுவாமியின் டுவிட்டர் பதிவு. இது உண்மை என்றால் வரவேற்கலாம் என்ற ட்வீட் செய்ததுதான். இது உண்மைக்கு புறம்பான தகவல் என்று கே.ஜே.ஜேசுதாஸ் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


எது எப்படியோ... பரபரப்பை கிளப்பி விட்டு விட்டது இந்த தகவல்.


Find out more: