1986-ம் ஆண்டு வெளிவந்த 'சமஜாம்லோ' தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் சரத்குமார். இதையடுத்து ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் இவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தற்போது நடத்தி வருகிறார். 


சினிமாவில் இவர் இரண்டு முறை தமிழ்நாடு தேசிய விருதும், 3 முறை பிலிம் பேர் விருதினையும் வென்றவர். இதோடு 1974-ம் ஆண்டு, 'மிஸ்டர் மெட்ராஸ்' பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் சினிமாவிலும், அரசியலிலும் சாதனை படைத்து வரும் சரத் குமார் இன்று தனது பிறந்தநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக மற்றும் அரசியல் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் இவருக்கு தமிழ் ஹெரால்டு சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



మరింత సమాచారం తెలుసుకోండి: