சென்னை:
சொல்லிட்டாங்க... சொல்லிட்டாங்க... எப்போன்னு சொல்லிட்டாங்க. கபாலி படத்துக்கு பிறகு ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்னைக்கு ரிலீசுன்னு சொல்லிட்டாங்க.


எந்த படமுன்னு சின்ன புள்ளைங்களும் சொல்லிடும்ங்க... அது சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படம். இந்த படத்தோட ரிலீஸ் தேதியைதான் தற்போது அறிவிச்சுட்டாங்க.


சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப் பிரம்மாண்டமாய் உருவாகியிருக்கும் படம் ‘ரெமோ’. இதில் பெண் வேடத்தில் ஒரு கெட்டப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுத்துள்ளது. படத்தோட படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்துள்ளன. 


இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். படம் வரும் அக்டோபர் 7-ந் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: