சென்னை:
கசிந்த கதையே பரபரப்பாக இருக்கும் போது... அதை வெள்ளித்திரையில் பார்த்தால்... இதுதான் இருமுகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.
விக்ரம் நடிப்பில் இருமுகன் படம் பிரமாண்டமாக தயாராகிவுள்ளது. இப்படத்தில் விக்ரம் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்று சொல்கிறார்கள். ஆனால் இதுவரை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவல்களும் இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் கதை என்று கோலிவுட் வட்டாரத்தை ஒரு வதந்தி உலா வருகிறது.
இப்படத்தில் 'திருநங்கை'யின் ஹார்மோன்களை கெமிக்கல்ஸ் மூலம் மாற்றி அவர்களை இனமாற்றம் செய்வதுதான் மையக்கதை என்பதுதான் அது. நயன்தாரா ‘ரா’ அதிகாரியாக வரும் ஒரு விக்ரமின் உதவியாளராக நடிக்கிறார் என்கின்றனர். இது உண்மையோ.. பொய்யோ... இந்த வதந்திதான் தற்போது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது