இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'மாவீரன் கிட்டு' என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். நடிகர் பார்த்திபன் இன்னொரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. 



இந்நிலையில், இந்த படத்தில்  பிரபல எடிட்டர் ஒருவர் நடிகராகியுள்ளார். எடிட்டர் மு.காசி விஸ்வநாதன் இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இவர் 2002-ம் ஆண்டிலிருந்து இதுவரை ஏராளமான திரைப்படங்களில், எடிட்டராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் முதன் முறையாக இந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் 'மாவீரன் கிட்டு' திரைப்படம் கிராம பின்னணியில் உருவாகுகிறது. இதில் காமெடி ரோலில் சூரி நடித்து வருகிறார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: