விஜய் சேதுபதி தற்போது 'றெக்க', 'ஆண்டவன் கட்டளை' உள்ளிட்ட ஆறு திரைப்படங்களில்  நடித்து வருகிறார். இந்நிலையில் நட்பின் ரீதியாக, தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


வடசென்னை படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் அவருக்கு மனைவியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. 


ஏற்கனவே இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக அமலா பால் நடிக்கவுள்ள நிலையில், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்க இருப்பது ஆச்சர்யத்தை அளிக்கிறது. 


எனினும் இதுகுறித்த அதிகார பூர்வத்த தகவல்கள் வரும் வரை நாம் இந்த செய்தியை நம்ப வேண்டாம்.


మరింత సమాచారం తెలుసుకోండి: