விஜய் நடிப்பில் வெளிவந்து, ஹிட்டான 'கத்தி' திரைப்படத்தை தற்போது தெலுங்குவில் ரீமேக் செய்கின்றனர். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். லைக்கா நிறுவனம் மற்றும் ராம் சரண் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை வி.வி.விநாயக் இயக்குகிறார்.


இதில் நயன்தாரா, அனுஷ்கா தான் ஹீரோயின் என்று பல்வேறு வதந்தி செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 


இந்நிலையில் இந்த படத்தில் இரண்டு கோலிவுட் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை, நடன புயல் பிரபு தேவா மற்றும் ராகவ லாரன்ஸ் மாஸ்டர் தான். 


இவர்கள் இருவரும் இந்த படத்தில் உள்ள இரண்டு பாடல்களுக்கு கோரியோகிராப் செய்ய ஒப்பந்தமாகியுள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: