சென்னை:
ஆஹா...ஆஹா...! சூப்பர் செய்தி... சூப்பர் செய்தி என்று ரசிகர்களின் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. எதனால் தெரியுங்களா?


பஸ் கண்டக்டராக இருந்து இப்போது உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு உச்சத்திற்கு வளர்ந்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எத்தனை உயரத்திற்கு சென்றாலும் இன்னும் எளிமை, எளிமைதான். இதுதான் அவரது ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று. இப்போது வெளியாகி உள்ள ஒரு செய்தி அவரது ரசிகர்களுக்கு செம கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 


என்னன்னா? ரஜினியின் வாழக்கை பயணத்தை ஒரு திரைப்படமாக விரைவில் எடுக்க இருக்காங்களாம். அவரது மகள்களான ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோர் இணைந்து இந்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக சொல்றாங்க. இதில் ரஜினி பற்றி ரசிகர்கள் அறியாத பல விஷயங்கள் இடம் பெறும் என்று தகவல் பரபரக்கிறது.



మరింత సమాచారం తెలుసుకోండి: