சென்னை:
அட இது என்ன அம்புட்டு சிதம்பர ரகசியமா? சொன்னால்தான் என்ன என்று ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.


எதற்காக தெரியுங்களா? குற்றம் கடிதல் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே செய்தி வந்தது. இப்படத்தின் போட்டோஷீட் சமீபத்தில் நடந்துள்ளது. அதுமட்டுமா? 20 நாட்கள் நடிப்பு பயிற்சியும் எடுத்தார் ஜோதிகா.


சரி அதுக்கென்ன இப்போ... என்று கேட்கிறீர்களா? போட்டோ ஷீட் நடந்துச்சுல்ல... அதை ரொம்ப கெடுபிடியாக நடத்தி இருக்காங்க. ஒரு போஸ்டர் கூட வெளியே போகக்கூடாது என படக்குழு உறுதியாகவுள்ளதாம்.


ஜோதிகா இந்த படத்தில் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை மூடி மறைக்கின்றனர். அட என்னங்க அம்புட்டு சிதம்பர ரகசியம். இன்னைக்கு இல்லைன்னா... நாளைக்கு தெரிஞ்சுட்டு போயிடு என்று ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.



మరింత సమాచారం తెలుసుకోండి: