மும்பை:
அங்கு வாய்ப்பு கிடைக்க... இங்கு வேண்டாம் என்று எஸ்கேப் ஆகி இருக்கிறாராம். யார் தெரியுங்களா?
வேறு யாரு... நம்ம வெளிநாட்டு நடிகை எமிதான். விஜய், விக்ரம், தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திறமையை காட்டிய எமி இப்போ... சூப்பர் ஸ்டாருக்கும் நாயகி ஆகிட்டார்.
இந்தியில் ‘பிரீகி அலி’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கப்பென்று பிடித்து கொண்டார். தொடர்ந்து ‘ஹாப் கேர்ள்பிரண்ட்’ என்ற படமும் வர அதில் முக்கிய வேடம் என்று சொன்னதால் ஓகே என்றவர் இப்போது அந்த படத்தில் இருந்து விலகி இருக்கிறாராம்.
ஏனென்று விசாரித்ததில் வரும் செப்டம்பர் மாதம் முதல் 2 ஆங்கில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அதனால் இந்தி படத்திலிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்று தகவல்கள் சொல்றாங்க... என்னம்மா... எமியம்மா... இப்படி செய்யலாமா? என்கின்றனர் இந்திவாலாக்கள்.