சென்னை:
என்னங்கப்பா... ஒரே மாதிரியாகவே கொடுக்குறீங்க... எனக்கு இந்த கதாபாத்திரம்தான் பிடிக்கும் என்று ஓப்பன் வாய்ஸ் விடுத்துள்ளார் நடிகை. 


அவர் சிருஷ்டி டாங்கேதான். தற்போது இவர் 2 படங்களில் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். என்ன படங்கள் தெரியுமா? ‘தர்மதுரை’ ‘பொட்டு’ ஆகிய 2 படத்திலும் இவர் டாக்டராக நடித்து வருகிறார். ஆனால் இவருக்கு வேறு ஒரு கதாபாத்திரம் மீதுதான் ஆசையாம்.


அது என்ன கேரக்டர் தெரியுங்களா? படிக்கும் போது இருந்தே சிருஷ்டி டாங்கேவிற்கு பத்திரிகையாளராக வேண்டும் என்று ஆசையாம். அது நிறைவேறவில்லை. படத்திலாவது பத்திரிகையாளராக நடிக்க சான்ஸ் கொடுங்கப்பா... என்கிறார். என்ன தயாரிப்பாளர்களே ஏதாவது ஒரு படத்தில் அவரது தீராத ஆசையை தீர்த்து வையுங்களேன்.



మరింత సమాచారం తెలుసుకోండి: