சென்னை:
போட்டியின்னு வந்துவிட்டால் நண்பர்கள் கூட எதிர் எதிர் திசையில்தான் நிற்க வேண்டும். அப்படிதான் நடந்துள்ளது இந்த விஷயமும்.


விஜய், சூர்யா இருவரும் நல்ல நண்பர்கள் தான். ஆனால் வியாபார போட்டி என்று வந்துவிட்டால் குதிச்சு களம் காண்பதுதானே சரியாக இருக்கும். 


தமிழகத்தில் எப்படி விஜய்-அஜித் என்று போட்டி கடுமையாக இருக்கிறதோ.... அதுபோலத்தான் கேரளாவில் விஜய்-சூர்யாவிற்கு சரியான போட்டி நிலவுகிறது. தெறி கேரளாவில் ரூ.16 கோடி வசூல் தர.... அப்புறம் என்ன டாப்புக்கு போனார் விஜய்.. ஆனால் சூர்யாவின் 24 படம் ரூ.10 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.


இப்போது இருவரும் நடித்து வரும் படங்களின் கேரளா வியாபாரம் முடிந்து விட்டதாம். பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ரூ.6 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகி உள்ளது. சிங்கம்-3 ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாம். நம்ம கோலிவுட் நடிகர்கள் தற்போது மல்லுவுட்டிலும் மல்லு கட்ட ஆரம்பித்துள்ளனர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: