நியாபகம் இருக்கிறதா ?.... ஓகே ஓகே கூட்டணியை....இல்லியா....இதோ வரேன். 


உதயநிதி ஸ்டாலின் முதன்முறை ஹீரோவாக அறிமுகமான 'ஒரு காதல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தை ராஜேஷ் இயக்கினார். இந்த படம் மெகா ஹிட்டானது. இதையடுத்து தற்போது உதயநிதி மற்றும் இயக்குனர் ராஜேஷ் இருவரும் ஒரு புது படத்தில் இணையவுள்ளதாக தகவல் வந்துள்ளது. 


இயக்குனர் ராஜேஷ் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தின் பின்தயாரிப்பு பணிகளில் பிசியாக உள்ளார். இந்த படம் முடிந்தவுடன், அவர் உதயநிதி ஸ்டாலினை வைத்து புது படம் இயக்குவார் என தெரிகிறது. 


ஆனால் இதுகுறித்து இயக்குனர் ராஜேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், இன்னும் எதுவும் முடிவாக வில்லை, பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது' விரைவில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும்' என்று பதிவு செய்துள்ளார். 


எனவே ஓகே ஓகே கூட்டணி இணையப்போகும் நல்ல செய்தி,  விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: