'டி மாண்டே காலனி' திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது அதர்வா நடிக்கவுள்ள ஒரு புது திகில் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதில் முக்கிய ரோலில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஆகியவற்றை நாம் முன்பே அறிந்தோம். 


இதையடுத்து இந்த படத்தில் நயன்தாராவிற்கு வில்லனாக இயக்குனர் கவுதம் மேனன் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளிவரவில்லை. 


இந்நிலையில் இயக்குனர் அஜய் ஞானமுத்து, ''இது பொய்யான தகவல், இயக்குனர் கவுதம் மேனன் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக நாங்கள் இதுவரை எந்த செய்தியும் வெளியிடவில்லை. அதனால் இது முற்றிலும் தவறான தகவல்'' என்று தனது வலைதள பக்கத்தில் அறிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: