சென்னை:
ஆசை... ஆசை... ஆசையாக இருக்கிறது என்று ஓப்பன் டாக் கொடுத்துள்ளார் இந்த கும்மாங்குத்து நடிகை.


யார் தெரியுங்களா? ‘இறுதிச் சுற்று’ படத்தில் நாயகியாக அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த ரித்திகா சிங்தான்.


இவரோட ஆசை என்ன தெரியுங்களா? அவர் கூறியது இதுதான். இன்னும் சரியாக தமிழ் பேச வரவில்லை. இப்போது மற்றவர்கள் தமிழில் பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது.


விரைவில் தமிழ் பேச கற்றுக்கொள்வேன். தமிழில் தனுஷ் பிடிக்கும். அவருடன் நடிக்க ஆசை. முகத்தில் காயம்பட்டால் படத்தில் நடிப்பதை பாதிக்கும் என்பதால் இப்போது பாக்சிங் போட்டிகளில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


அப்ப அடுத்த தனுஷ் படத்தில் கண்டிப்பாக இடம் பிடிச்சுடுவீங்க... போலிருக்கே...!


Find out more: