"ஓரம்போ","வா குவாட்டர் கட்டிங்" திரைப்படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஜோடி புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் சென்ற வெள்ளிக்கிழமை (ஜூலை 21) வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. வியாசர்பாடி தாதா வேதாவாக விஜய் சேதுபதியும், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரமாக மாதவனும், அவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், இவர்கள் தவிர வரலக்ஷ்மி, கதிர், பிரேம் மற்றும் பலர் நடித்த இத்திரைப்படம், வெளியான ஐந்தே நாட்களில் தமிழகத்தில் மட்டும் பத்து கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. 

Image result for vikram vedha


மேலும், அமெரிக்காவில் இரண்டு கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது விக்ரம் வேதா. ஜி.எஸ்.டியால் துவண்டு போய், தியேட்டர்களில் கூட்டம் குறைந்து போயிருந்த நேரத்தில், விக்ரம் வேதா, ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி படையெடுக்க வைத்திருக்கிறது. 


Image result for vikram vedha




இந்த அரையாண்டில் "பாகுபலி 2"  திரைப்படத்திற்கு பின் ஒரு உண்மையான சூப்பர்ஹிட் திரைப்படம் ஆக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது விக்ரம் வேதா. மக்களின் பேராதரவில் வெற்றிநடை போட்டு வரும் இத்திரைப்படத்தை, பல பிரபலங்களும், விமர்சகர்களும் பாராட்டி வரும் நிலையில் , இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு திரையீட்டில் விக்ரம் வேதா
  கண்டு ரசித்தார். விக்ரம் வேதா, மாதவன், விஜய் சேதுபதி ஆகிய இருவரின் சினிமாவாழ்வில் மிகப்பெரிய வெற்றித்திரைப்படம் ஆக வாய்ப்புகள் உள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: