நைஜீரியா:
வாங்க... மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஸ்டார்ட் செய்வோம் என்பது போல எண்ணை வளங்களை பாதுகாக்க மாஜி தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். எங்கு தெரியுங்களா?


நைஜர் டெல்டாவில் தனது எண்ணெய் வளங்களைத் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க முன்னாள் தீவிரவாதிகளுக்கு நைஜீரிய அரசு மீண்டும் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளதுதான் விஷயமே!


கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து அவர்களுக்கு பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் அந்த காலக்கட்டத்தில் தாக்குதல்கள் தீவிரமடைந்தன. எண்ணெய் உற்பத்திப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது.


 கடந்த 2009ல் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் கீழ் தீவிரவாதிகள் தங்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித் தொகை கொடுத்தால், அவர்கள் எண்ணெய் குழாய்களை சேதப்படுத்துவதை நிறுத்துவதாக தெரிவித்து இருந்தனர். பொதுமன்னிப்பு ஒப்பந்தத்தின் போது அதன் அங்கமாக இல்லாத 'நைஜர் டெல்டா அவென்ஞ்சர்ஸ்' என்ற ஒரு புதிய தீவிரவாதக் குழு தங்களது குழுதான் பெரும்பாலான சமீபத்திய தாக்குதல்களுக்கு காரணமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது.


இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பணத்தை மீண்டும் கொடுக்க முடிவு செய்துள்ளது நைஜீரிய அரசு. இதனால் எண்ணை வளங்களுக்கு பாதுகாப்பு ஏற்படும் என்று நம்புகிறது.


Find out more: