கராச்சி:
உலகின் ஒரு நாட்டில் இயற்கை மக்களை பாடாய்படுத்தினால் மறுபக்கம் தீவிரவாதிகளின் அட்டூழியத்தில் மக்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.


நடந்த சம்பவத்தின் செய்தி இதுதான். பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள மருத்துவமனையில் சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 25 பேர் பலியானதுதான் அது. 


பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் பார் அசோசியேசன் தலைவர் பிலால் அன்வர் காசி இன்று மர்ம நபர்களால் சுடப்பட்டார். உடன் அவரது வக்கீல்கள் அவரை குவெட்டா மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் இறந்து விட்டார்.


இதுபற்றி தகவல் அறிந்த ஏராளமான வக்கீல்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது அங்கு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.


இதில் வக்கீல்கள் உட்பட 25 பேர் பலியாகி விட்டனர். 35 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பதட்டம் நிலவியது. பொதுமக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர். அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பிற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என்பது குறித்து உடன் தகவல் கிடைக்கவில்லை.


Find out more: