பீஜிங்:
அடுத்தடுத்து...டம்...டம்...டம்... மோதி தள்ளிய டிராக்டர் 11 பேரின் உயிரை பறித்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், பைக் மீது மோத 11 பேர் பலியாகினர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரான ஜிபோ பகுதியில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழக்க... அவ்வளவுதான் நிலைதடுமாறி அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், பைக் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.
அடுத்தடுத்து வாகனங்களின் டம்... டம்.. .டமார்... என்ற சத்தம் முன்னால், பின்னால் வந்த வாகனங்களை ஓரம் கட்ட செய்தது. இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்த 20-க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.