பநீநகர்:
தோண்ட தோண்ட புதையல் என்று கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் இங்கே... தேட தேட பயங்கரவாதிகளாக இருக்கின்றனர். எங்கு தெரியுங்களா?


காஷ்மீரில் நிலவி வரும் பதற்றத்தை தணிய விடாமல் செய்வதற்காக வடக்கு காஷ்மீரின் குப்வாரா, உரி பகுதிகளில் சுமார் 60 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் காஷ்மீரின் பல பகுதிகளில் சுற்றி வருகின்றனராம். இவர்கள் அவ்வப்போது இந்தியர்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டி விட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வந்துள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதனால் இவர்களை விரட்டி அடிக்கவும், பார்த்த இடத்தில் சுடவும் ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் காஷ்மீர் பகுதியில் மேலும் மேலும் பதற்றம் அதிகரிக்கிறதோ தவிர குறைந்த பாடில்லை. காஷ்மீரில் உருவான பிரச்னையின் பின்னணியில் பாக். உள்ளது என்ற குற்றச்சாட்டும் தற்போது பயங்கரவாதிகளின் ஊடுருவலால் ஊர்ஜிதமாகி உள்ளது.


Find out more: