வாஷிங்டன்:
மிகவும் பெருமையாக உள்ளது இந்த செய்தியை கேள்விப்படும் போது. ஆமாங்க என்ன செய்தி தெரியுங்களா?


வெள்ளை மாளிகை பெலோஷிப் கவுரவத்துக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் இந்திய வம்சாவளி பெண்கள். இது இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெருமைதானே. இந்த 2 பெண்கள் கலிபோர்னியாவை சேர்ந்த அஞ்சலி திரிபாதி, சிகாகோவை சேர்ந்த டினா ஆர். ஷா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆண்டுதோறும் அமெரிக்காவில் தொழில் உட்பட பல துறைகளில் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ கவுரவம் வழங்கும் வழக்கம் 1964-ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜான்சனால் ஏற்படுத்தப்பட்டது. 


இந்த கவுரவத்தை பெறுவதற்கு அமெரிக்க மக்களிடையே பலத்த போட்டி நிலவுவது வழக்கம். காரணம் இது மிகுந்த கவுரவமான ஒன்று என்பதால். இந்த ஆண்டு, ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ கவுரவத்துக்கு 16 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதில் 2 பேர் இந்திய வம்சாவளி பெண்கள் என்பது இந்தியாவிற்கு கிடைத்துள்ள பெரிய பெருமையாக கருதப்படுகிறது. கலிபோர்னியாவை சேர்ந்த அஞ்சலி திரிபாதி, சிகாகோவை சேர்ந்த டினா ஆர். ஷா  இருவரும்தான் தற்போது இந்த பெருமைக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். இருவரும் தத்தமது துறையில் பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி பெயர் பெற்றிருக்கிற நிலையில், இவர்களுக்கு ‘வெள்ளை மாளிகை பெலோஷிப்’ அறிவிக்கப்பட்டிருப்பது, மணி மகுடமாக அமைந்துள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: