அன்காரா:
அங்கிருந்து இங்கே வாலாட்டினா விட்டுடுவோமா? பொங்கி எழுந்த துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் எல்லை மீறி சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளை பதம் பார்த்துள்ளது.


இதுதாங்க மேட்டரு... சிரியாவுக்குள் இருந்தபடி துருக்கி எல்லையில் அவ்வப்போது வாலாட்டிவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துகட்ட ஆவேசமாக துருக்கி நாட்டு ராணுவ டாங்கிகள் சிரியாவுக்குள் அத்துமீறி நுழைந்து ஆவேச தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.


சிரியா-துருக்கி எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் மீது மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். அவ்வளவுதான் இதற்கு பதிலடியாக சிரியாவுக்குள் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களின்மீது துருக்கி படைகள் 40 முறை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.


அதுமட்டுமா? துருக்கி - சிரியா எல்லையோரம் உள்ள சிரியாவுக்கு சொந்தமான ஜராப்லஸ் நகருக்குள் துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான 9 பீரங்கி டாங்கி வாகனங்கள் அதிரடியாக புகுந்தன. ராணுவத்தினரும், துருக்கியை சேர்ந்த போராளி குழுவினரும் இயந்திர துப்பாக்கிகளுடன் டாங்கி வாகனங்களை பின்தொடர ஐ.எஸ். தீவிரவாத முகாம்கள் மற்றும் சிரியாவில் உள்ள போராளிகள் தங்கியிருக்கும் பகுதிகள்மீது குண்டுகளை வீசி ஆவேசமான தாக்குதலில் ஈடுபட்டன. 


துருக்கி அரசின் இந்த அதிரடி நடவடிக்கை தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளது சிரியா அரசு. துருக்கியின் நடவடிக்கையால் கவலை அடைந்துள்ளதாக சிரியாவின் நட்பு நாடான ரஷ்யாவும் தெரிவித்துள்ளது. 


మరింత సమాచారం తెలుసుకోండి: