கோலாலம்பூர்:
அதிர்ச்சியை சந்தித்துள்ளது மலேசியா... எதனால் தெரியுங்களா? காரணம் இதுதான்.


மலேசியாவில் இலங்கை தூதருக்கு அடிஉதை விழுந்ததுதான் பெரும் பரபரப்பிற்கு காரணமாகி உள்ளது. கோலாலம்பூர் சர்வதேச விமானநிலையத்திற்கு மலேசியாவிற்கான இலங்கை தூதர் இப்ராஹிம் அன்சார் வந்து இறங்கினார்.


அப்போது எங்கிருந்தோ வந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது. அவரை அடித்து துவைத்து எடுத்துவிட்டனர். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. சில விநாடிகளில் நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டி.வி.கேமிராவில் பதிவானது.


இந்த சம்பவத்தால் மலேசியாவை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதுகுறித்து மலேசிய போலீசார் விரைவாக விசாரணை நடத்த... அதில் கடந்த வாரம் மலேசியாவுக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகள் பேரணி நடத்தின.


அப்போது ராஜபக்சேவுடன் வந்தவர்தான் இவர் என்று நினைத்து தூதரை தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த தகவல் இலங்கைக்கு தெரிய வர... இலங்கைக்கான மலேசிய தூதர் வான் ஜைதி அப்துல்லாவை அழைத்து கண்டனம் தெரிவித்தது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை மலேசியா போலீசார் கைது செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



మరింత సమాచారం తెలుసుకోండి: