ஜீரோ காஸ்டில் பிரியாக கிடைக்கவுள்ள ஜியோ போனில் தற்போதைக்கு வாட்ஸ்அப் இல்லை என கூறப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குரூப்பின் முகேஷ் அம்பானி ரூ.0 விலையில் ஜியோ போனை இன்று காலையில் அறிமுகப்படுத்தினார். இதற்கான முன்பதிவு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த போனுக்காக செலுத்தப்படும் 1500 ரூபாய் டெப்பாசிட் தொகை 36 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கே வழங்கப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ போனில் 4ஜி இணையதள சேவையை பெறமுடியும்.
அதேநேரத்தில் இந்த போனில் முக்கியமாக பிரதமரின் மான் கீ பாத் செயலி இடம்பெற்றுள்ளது. மேலும் ஃபேஸ்புக் வசதியும் ரிலையன்ஸ் ஜியோ போனில் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel