சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் விற்றிருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென வேகமாக அகற்றப்பட்டது.

இதற்கு சிவாஜி ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் இடத்தில் முன்பு வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தச் சிலை இருந்த இடம் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருப்பதால் இதனை அகற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் முன் தினம் புதன்கிழமையன்று நள்ளிரவில், இயந்திரங்களின் மூலம் சில மணி நேரத்தில் வேகமாக சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது. அங்கிருந்து ஒரு பெரிய ரக சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட சிலை, சென்னை சத்யா ஸ்டுடியோவிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் சிவாஜி கணேசனின் மணி மண்டபத்திற்குக் எடுத்து செல்லப்பட்டது. அந்த மணிமண்டபத்தில் இந்தச் சிலை நிறுவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel