
குமரி மாவட்டத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கடும் விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்து முன்னணி, பாஜக , சிவசேனா, தமிழ்நாடு சிவசேனா, இந்துமகா சபா உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் அவர்கள் சார்பில் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு பின்னர் அதை நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இதற்காகத் தாமரை விநாயகர், அன்னப்பறவை விநாயகர், மூஷிக விநாயகர் என பல்வேறு வகையிலான வித்தியாசமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 2 அடி முதல் 6 அடி வரையிலான விநாயகர் சிலைகள் பரபரப்பாக தயாரிக்கப்பட்டு, அந்தந்த இடங்களுக்கு அனுப்பும் பணிகள் தொடங்கி உள்ளன.
click and follow Indiaherald WhatsApp channel