சென்னை: மத்திய அரசு மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். தூய்மையே கடவுள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி இன்று தெரிவித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி தூய்மை இந்தியா பிரச்சாரத்தை பிரதமர் மோடி கோலாகலமாக தொடங்கி வைத்தார். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, திறந்தவெளி கழிப்பிடங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, அனைவருக்கும் கழிவறை வசதியை ஏற்படுத்துவதே ஆகியவைகளே இதன் நோக்கம்.
இந்தப் பிரச்சாரம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைய உள்ளது. இந்நிலையில், மக்கள் ஆதரவை திரட்டி தூய்மை இந்தியா திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக. 'தூய்மையே சேவை' என்ற புதிய பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

இது அடுத்த மாதம் அக்டோபர் 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக பிரபல தொழிலதிபர்கள், முன்னணி விளையாட்டு வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்தநிலையில் இந்த திட்டத்திற்கு பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்திற்கு ஆதரவாக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூய்மையே கடவுள் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினி தெரிவித்துள்ளார். பிரதமரின் தூய்மையே சேவை திட்டத்திற்கு தனது ஒட்டு மொத்த ஆதரவு உண்டு என்றும் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel