திருச்சி:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருச்சி உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை படைக்கப்பட்டது.


விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்து வருகிறது.


அதுமட்டுமா... பொது இடங்களில் பல்வேறு அமைப்பினரும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 


இதன் ஒரு பகுதியாக மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


உச்சிபிள்ளையாருக்கு 75 கிலோ எடையுள்ள பிரமாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது. பிள்ளையாருக்கு படைப்பதற்காக இந்த மெகா கொழுக்கட்டையை தூளிகட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மலைக்கோயிலுக்கு சுமந்து வந்ததை பார்ப்பதற்காகவே ஏராளமான பக்தர்கள் மலைக்கோட்டையில் திரண்டிருந்தனர்.


பிரமாண்ட கொழுக்கட்டை எடுத்து வரப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி கும்பிட்டு திரும்பினர்.


మరింత సమాచారం తెలుసుకోండి: