சென்னை:
இயற்கை, இயற்கையை சார்ந்த இடம்னு செம கலக்கு கலக்கின பிரபு சாலமனின் அடுத்த படம்தான் அவரோட கும்கி-2 ம் பாகத்தை எடுக்க உதவுமான்னு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.


விக்ரம் பிரபுவை வைத்து பிரபு சாலமன் எடுத்த கும்கி செம ஹிட் படம். தற்போது இவர் தனுசை வைத்து தொடரி படம் எடுத்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் இவர் கும்கி பார்ட் 2 எடுக்க முடிவு செய்துள்ளார்.


நாயகனாக விக்ரம் பிரபு நடிக்க இந்த முறை கதைகளம் வெள்ளை யானைகளின் தேசம் என்று கொண்டாடப்படும் தாய்லாந்தில் நடப்பது போல் இருக்குமாம். பட்ஜெட் உட்பட பிற விஷயங்களை தொடரி படம் வெளி வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பு நிர்வாகம் சொல்லியிருக்காம்... தொடரிதான் கும்கி-2 வை ஒப்பேற்ற வேண்டுமா?


మరింత సమాచారం తెలుసుకోండి: