சென்னை:
அதிர... அதிர... அதிரடிக்கும் கபாலி பட செய்திகள் ரசிகர்களுக்கு புல் பிரியாணி சாப்பிட்டது போல் இருக்கிறது. அதுபோல்தான் டிரைய்லரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அடுத்து வருது ஒரு டீசர் என்ற செய்தி பிரியாணிக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிட்ட எபெக்ட்டை கொடுத்துள்ளது.


"கபாலி" ஆரம்பித்தது முதல் இன்று வரை தொட்டதெல்லாம் ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும். தினம் ஒரு செய்தி... தினம் ஒரு படம் என்று கபாலி பற்றிய தகவல் இல்லாத பத்திரிகையே இல்லை. ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் ரசிகர்கள் டிரைய்லைரை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.


முதல் டீசர் அடித்த சரவெடி சத்தமே இன்னும் அடங்காத நிலைதான். அதற்குள் நெருப்புடா டீசர் லட்சம் வாலா சர வெடியை கொளுத்தியது போல் அமைந்தது. இப்போது டிரைலரை எதிர்பார்த்துள்ள ரசிகர்களுக்கு அடுத்து வர்ற போறது டீசர் என்ற தகவல்தான் செம கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. வாங்க... கபாலி... வாங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: