புதுடில்லி:
மாமு... செம ட்ரீட் என்று சினிமா ரசிகர்கள் இப்பவே ஸ்வீட் எடு கொண்டாடு என்று என்ஜாய் செய்கிறார்கள்... எதற்கு தெரியுங்களா?
இந்தியாவில் மக்களின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு சினிமாதான். மாங்கு மாங்கு என்று வாரம் முழுக்க உழைக்கும் மக்களுக்கு அடுத்த ஒரு நாள் சினிமாதான் பெரிய வரப்பிரசாதம். இப்போ தியேட்டர்களில் 4, 5 தான் காட்சிகள். அதுதானே வழக்கம். இல்லீங்க இனிமே 24 மணிநேரமும் சினிமா தியேட்டர்கள் இயங்க முடிவு செஞ்சிருக்காங்களாம்.
இந்த முடிவு மத்திய மந்திரி சபையில் எடுக்கப்பட்டுள்ளதாம். இதைதான் நம்ம ராக்கோழி சினிமா நண்பர்கள் ஸ்வீட் எடுத்து கொண்டாடி வருகின்றனர்.