மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை, கட்டுப்பாட்டு மண்டலமாக, மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரத்தில், 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுதான். பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை, மருத்துவமனைக்கு நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதித்தால், அது வேறு பல நோயாளிகளுக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

"இவ்வளவு அதிக நோயாளிகள் மருத்துவ துறையிலிருந்து வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்" என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணைக்கு நிர்வாக சுகாதார அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட செவிலியர்கள் வைல் பார்லேயில் உள்ள தங்களது தங்கும்விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சில நோயாளிகளின் ஸ்வாப் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம், மருத்துவமனையின் கேண்டீன் செயல்பட்டு வருகிறது, ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உணவை வழங்கும், ஆனால், கேண்டினில் மக்கள் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு அதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரிபாடா காவல் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் சவலராம் அகவானே தெரிவித்துள்ளார்.மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை, கட்டுப்பாட்டு மண்டலமாக, மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரத்தில், 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுதான். பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை, மருத்துவமனைக்கு நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதித்தால், அது வேறு பல நோயாளிகளுக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

"இவ்வளவு அதிக நோயாளிகள் மருத்துவ துறையிலிருந்து வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்" என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணைக்கு நிர்வாக சுகாதார அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

பாதிக்கப்பட்ட செவிலியர்கள் வைல் பார்லேயில் உள்ள தங்களது தங்கும்விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சில நோயாளிகளின் ஸ்வாப் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேநேரம், மருத்துவமனையின் கேண்டீன் செயல்பட்டு வருகிறது, ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உணவை வழங்கும், ஆனால், கேண்டினில் மக்கள் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு அதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரிபாடா காவல் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் சவலராம் அகவானே தெரிவித்துள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: