'ஆள்' படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கி உள்ள 'மெட்ரோ'. சிரிஷ், பாபி சிம்ஹா, சத்யா, செண்ட்ராயன், மாயா, துளசி நடித்திருந்த இந்தப் படத்திற்கு ஜோகன் இசை அமைத்திருந்தார். உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். சென்னை போன்ற பெரு நகரங்களில் செயின் பறிப்பு திருடர்கள் எப்படி உருவாகிறார்கள். 


அவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக இருந்து பதிவு செய்திருந்தது இப்படம். கடந்த 24ம் தேதி வெளியான இந்த படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்தப் படத்தை அதன் தயாரிப்பாளர் ஜெயகிஷ்ணன் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார். தமிழில் இயக்கிய ஆனந்த் கிருஷ்ணனே தெலுங்கிலும் இயக்குகிறார்.


சிரிஷ் நடித்த கேரக்டரில் நாக சைதன்யா நடிக்கலாம் என்று தெரிகிறது. சத்யா நடித்த நெகட்டிவ் கேரக்டரில் இன்னொரு தெலுங்கு ஹீரோ நடிக்கிறார். மெட்ரோ டெக்னிக்கல் டீம் அப்படியே தெலுங்கில் பணியாற்ற இருக்கிறது. தமிழில் சிறு பட்ஜெட்டில் உருவான படம் தெலுங்கில் பெரிய பட்ஜெட்டில்  தயாராக இருக்கிறது.     



Find out more: