மும்பை:
அங்க மாறிட்டாங்க... இங்க... என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. பாலிவுட்டில் பழக... பழக... ஆசை என்று பகை மறந்து பழகுறாங்க...


சண்டைக்கோழிகளாக முறுக்கிக்கிட்டு இருந்த பாலிவுட் ஸ்டார்கள் சல்மான்கானும், ஷாருக்கானும் இப்போ... மூழ்காத ஷிப்பே பிரண்ட்ஷிப்தான் என்று நட்பு கோழிகளாக மாறிவிட்டார்கள். 


திரைப்பட வெளியீட்டு விழாக்களில் ஒருவரை மாறி ஒருவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். அத்தோடு விட்டார்களா? இல்லியே... அடிக்கடி சாகச பயணங்களும் போறாங்கப்பா... சமீபத்தில் கூட இந்த 2 பேரும் மும்பை பாந்திரா பகுதியில் சைக்கிளிங் போயிருக்காங்க என்றால் பார்த்துக் கொள்ளுங்க.


இவர்கள் இப்படி என்றால் இவர்களின் குடும்பத்தினர் பெவிக்கால் போட்டது போல் ஒட்டோ... ஒட்டு என்று ஒட்டிக்கிடக்கின்றனராம். அங்க மாறிட்டாங்க... நம்மாளுங்க... மாறுவாங்களா? மாறினால் சூப்பர்தான்.


మరింత సమాచారం తెలుసుకోండి: