சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். க்ளோபல் இன்போடைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசைப்பணிகளை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார்.
இந்த படத்தில் சிம்பு மூன்று கெட்டப்களில் நடிக்கிறார். ஒரு கதாநாயகியாக 'சிவாஜி' நடிகை ஷ்ரேயா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடைபெறுகிறது.
மேலும் தற்போது வெளிவந்துள்ள தகவலில், 'ஏஏஏ' திரைப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மாறி மணி இந்த படத்தில் அறிமுக நடிகராக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், அதிகார பூர்வமாக அறிவித்து, உறுதிப்படுத்தியுள்ளார்.