சென்னை:
அப்படியா... கேட்கும் "தல" ரசிகர்கள் வாயடைத்து போய் நிற்கின்றனர். ஒரு பக்கம் "தல" படத்தின் தற்போதைய ஷீட்டிங் பரபரக்கிறது. மறுபக்கம் அடுத்த படம் இவர் தயாரிக்கிறார் என்று செய்திகள் இறக்கை கட்டி பறக்கிறது. விஷயம் என்னன்னா?


"தல"-57 படத்திற்கு பிறகு அவரது கால்ஷீட் யாருக்கு... யாருக்கு... என்று கியூ கட்டுது கேள்விகள். இதில் விஷ்ணுவர்தன், முருகதாஸ், அட்லீ என பல பெயர்கள் முந்தி நிற்கிறது. ஆனால் இதில் அடலீ முன்னாடி வருவார் என்கிறார்கள். அவர் கூறிய கதை "தல"க்கு ரொம்ப பிடித்து விட்டதாம். அதனால் லிஸ்டில் முன்னணியில் இவரது பெயர் இருக்கிறது. 


இப்ப லேட்டஸ்ட் தகவல் என்னன்னா? "தல"யின் அடுத்த படத்தை தயாரிக்க போவது பாலிவுட் ஸ்டார் அமிதாப்ஜி என்கிறார்கள். இவர் ஏற்கனவே அஜித், விக்ரமை வைத்து உல்லாசம் படத்தை தயாரித்தவர்தான். அதன்பிறகு படங்கள் தயாரிக்கவில்லை.  இந்நிலையில் மீண்டும் "தல" படத்தை பிரமாண்டமாக தயாரிக்க  முன்வந்துள்ளாராம், இதுதான் தற்போது கோலிவுட்டை கலக்கும் ஹாட் நியூஸ்.


మరింత సమాచారం తెలుసుకోండి: