வாஷிங்டன்:
இருக்குங்க... இருக்கு... பூமியை போல் புதுசா இன்னும் 20 கிரகங்கள் இருக்குன்னு நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.


“நாசா” மையம் அனுப்பிய ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் காமிரா பொருத்தப்பட்டுள்ளது. அவை புதிய கிரகங்களை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.


இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிரகங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரங்களில் உயிரினங்கள் வாழ தகுதியுள்ளதாக 216 கிரகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.


அவற்றில் 20 கிரகங்கள் பூமியை போன்று உயிரினங்கள் வாழ மிகவும் தகுதியுள்ளவை என்று கண்டுபிடிச்சு இருக்காங்க... இந்த கிரகங்கள் நட்சத்திரங்களை ஒட்டியுள்ளது. 


இத்தகவலை நாசா விஞ்ஞானி ரவிகுமார் கொபாரபு தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு சாதனைதானே....



మరింత సమాచారం తెలుసుకోండి: