சென்னை:
"தல" இப்ப நடிக்கும் படத்தை நாலு வெளிநாடுகளில் படம் பிடிக்க போறாங்களாம். விஷயம் அறிந்த கோலிவுட் கோழி ஒன்று உரக்க சத்தம் போட்டு சொல்லிட்டு போகுது.


"தல" இப்ப நடிக்க போற படத்தை சிறுத்தை சிவா இயக்க போறார் என்பது தெரிந்த செய்தி... படத்தோட படப்பிடிப்பு பல்கேரியாவில் தொடங்குறாங்க. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே இந்த படப்பிடிப்பு நடக்குது. இதுக்காக பல்கேரியாவையும் சேர்த்து மொத்தம் 4 நாடுகளில் லொக்கேசன் பார்த்து வைச்சிருக்காங்களாம். இது ஒருபக்கம் என்றால்... இந்த படத்தோட பர்ஸ்ட்லுக் வரும் பொங்கல் அன்றும், படம்வ ரும் தமிழ்ப்புத்தாண்டிலும் வெளியாகும் என்று சொல்றாங்க. 


பொங்கலுக்கு இனிப்பு கொடுத்து தமிழ் புத்தாண்டுக்கு விருந்து வைக்க போறார் "தல" என்று ரசிகர்கள் இப்பவே கொண்டாட ஆரம்பிச்சுட்டாங்க பாஸ். 


మరింత సమాచారం తెలుసుకోండి: