சென்னை:
எனக்கும் இந்த கதியா... என்று தளபதி நடிகர் நொந்து போய் கிடக்கிறாராம். என்ன விஷயம் தெரியுங்களா?


ஒரிஜனல் முடி கொடுக்கிற சுகத்தை ஓசி (விக்) முடி கொடுக்குமா? கொடுக்காதே... அதாங்க... அதேதாங்க பிரச்னை. தளபதி நடிகருக்கு வயசாக... வயசாக... தலையில் முடிகள் இழப்பு அதிகமாகிடுச்சு... அய்யோ... அப்போ நமக்கும் இனி ஓசி முடிதானா என்று நொந்து போன அவரு... மினரல் வாட்டரில் குளிக்கலாமா... கழுதை பாலில் தலையை நனைக்கலாமான்னு என்னனவோ செய்து பார்த்தாலும்... நான் இதுக்கெல்லாம் மட்டுப்படமாட்டேன் என்று கொட்டிய முடிகள் பழிப்பு காட்டி இருக்கு.


அப்புறம் என்ன? பறந்தார் அமெரிக்காவிற்கு. சிகிச்சை செய்துக்கிட்டதால்தான் இப்போ நடிக்கிற படத்தில் விக் வைச்சு நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்... 


இந்த ஹேர் லாசுக்கு சிகிச்சை செய்து கொண்டதால்தான் திடீர் மொட்டையும் போட்டு இருந்தாராம். இப்போ... அந்த மொட்டை தலையில ஓசி முடி வந்து உட்காந்து இருக்கு... எப்படியோ... முடி பிரச்னை முடிந்தால் சரிதான் என்று இருக்கிறார்.



మరింత సమాచారం తెలుసుకోండి: