அண்மையில் சமுத்திரக்கனியின் இயக்கத்தில், சமுதாயத்திற்கு கருத்துக் கூறும் வகையில் வெளிவந்த 'அப்பா' திரைப்படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இந்த படம் வெளிவந்த நாளிலிருந்து, இதுவரை  தமிழ்நாட்டில் மட்டும் கோடிக்கணக்கில் வசூல் ஆகிறதாம்.


மேலும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாக 'அப்பா' அமைந்துள்ளது. இதோடு, நேற்று கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். 


அதில் அனைவரும் தங்கள் குழந்தைகளோடு 'அப்பா' திரைப்படத்தை திரையரங்கில் பார்க்குமாறு, கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் அவர் வலியுரித்துள்ளார். இது அப்பா திரைப்படத்திற்கு மேலும் பெருமை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: