சென்னை:
வர வரைக்கும் செய்திகள்தான் வந்த பின்னரும் செய்திகள்தான் என்று கபாலி பீவர் இன்னும் அடங்கவே இல்லீங்க...


கபாலி படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிடுச்சு. தமிழகமே மற்றொரு தீபாவளியை கொண்டாடி வருகிறது. ஆனால் சில இடங்களில் அதிர்ச்சிதான் ரசிகர்களுக்கு. இந்த படத்தின் டிக்கெட்டுக்கள் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு விற்பனையாகி வருவதால் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறதாம். இதனால் ரசிகர்கள் வெறுத்துப்போய் உள்ளனர். இதுகுறித்து புகார்களும் எழுந்தன. அப்போதுதான் ரசிகர்களுக்கும் சேர்த்து ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது.


இன்று காலை சென்னையில் கபாலி திரையிடப்பட்ட 18 திரையரங்குகளில் திடீர் ரெய்டு நடத்தியிருக்காங்க அதிகாரிகள் என்று தகவல்கள் பரபரக்கின்றன. உண்மையா என்பதை அரசுதான் தெரியப்படுத்த வேண்டும். எது எப்படியோ... படம் வசூலில் சக்கைப்போடு போட்டு வருவது என்பது மட்டும் உண்மையோ உண்மை.


Find out more: