நடிகர் ஜெய் மற்றும் அஞ்சலி நடிப்பில் தற்போது 'பலூன்' திரைப்படம் உருவாகி வருகிறது. சினீஷ் என்பவர் இயக்கும் இந்த படத்தை திலீப் சுப்புராயன், அருண் பாலாஜி, நந்த குமார் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கின்றனர். 


இசை பணிகளை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொள்கிறார். ஹாரர் கதையை கொண்டு உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகை ஜனனி அய்யர் இணைந்துள்ளார். 


'பலூன்' திரைப்படத்தில் ஜனனி ஓர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம். இந்த தகவலை இயக்குனர் சினீஷ் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


మరింత సమాచారం తెలుసుకోండి: