இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது 'சென்னை 600028 -2' திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இதே போல், இயக்குனர் ராஜேஷும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படத்தை இயக்கி வருகிறார். 


இந்த இருபடங்களையும் முடித்த பிறகு, வெங்கட் பிரபு மற்றும் ராஜேஷ் இருவரும் இணைந்து ஒரு புது படத்தில் பணியாற்ற போகிறார்கள். இந்த படத்தின் திரைக்கதை வசனங்களை ராஜேஷ் மேற்கொள்ள போகிறார். இயக்குனர் பணியை வெங்கட் பிரபு செய்யவுள்ளார். 


மேலும் இந்த படத்தில் ஹீரோவாக கயல் சந்திரன் நடிக்க போகிறார். இதன் படப்பிடிப்பு மற்றும் இதில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகை குறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கயல் சந்திரன்


Find out more: