சென்னை:
டிரெய்லரே கலக்கலாக உள்ளது. இப்போ அவருக்கு கவனம்... படத்தை வெளியிடுவதுதான் என்று சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஒருவர். யார் தெரியுங்களா?


அனைத்து நடிகர்களுக்கும் பிடித்தமான மாஸ் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்தான் அவர். இவர் காலில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கமலை சந்தித்து உள்ளார். அப்போது அவருக்கு விஸ்வரூபம்-2 டிரெய்லரை காட்டினாராம் கமல். செம கலக்கி கலக்கி இருக்கும் அந்த டிரெய்லரை பார்த்து சந்தோஷப்பட்ட கே.எஸ்.ரவிக்குமார் இது குறித்து தகவலை வெளியிட்டுள்ளார். 

கே.எஸ்.ரவிக்குமார்


‘விஸ்வரூபம்’ 2ம் பாகம் முற்றிலும் முடிந்துள்ள நிலையில் தயாரிப்பாளருக்கும், கமலுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. ‘படத்தை முடித்துக்கொடுத்துவிட்டேன். இனி ரிலீஸ் செய்ய வேண்டியது தயாரிப்பாளர்தான்’ என ஒரு பேட்டியில் கமலே குறிப்பிட்டிருந்தார். 


இதற்கிடையில் ‘உத்தமவில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’ என 3 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. 4வது படமாக ‘சபாஷ் நாயுடு’ வர இருக்கு. அதற்கு பிறகு ‘விஸ்வரூபம் 2’ம் பாகம் ரிலீஸ் செய்வதில் கமல் கவனம் செலுத்தி வருகிறாராம். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளி வரும் என்று கூறுகின்றனர்.


Find out more: