திருவனந்தபுரம்:
உயர்ந்த பதவி கொடுத்து இருக்காங்க... இவருக்கு. அதனால இப்ப அவரு செம ஹேப்பியாம்... யாருன்னு  சொல்றோம் கேளுங்க...


கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான அச்சுதானந்தனுக்குதான், நிர்வாக சீர்திருத்த கமிஷன் தலைவர் பதவியை கொடுத்து இருக்காங்க.


கேரள மாநில சட்டசபைக்கு, சமீபத்தில் நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போ அச்சுதானந்தன் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழ... அதற்கு நேர்மாறாக பினராயி விஜயன் முதல்வரானார். 


இதனால் அச்சுதானந்தன் அதிருப்தியில் இருந்தார். அப்புறம் என்ன? வழக்கம் போல் அவரை சமாதானப்படுத்தும் வகையில் கேரள மாநில நிர்வாக சீர்திருத்தங்கள் கமிஷன் தலைவராக அச்சுதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.


அச்சுதானந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவி, கேபினட் அந்தஸ்து உடையது. அப்புறம் என்ன இப்ப அவரு செம "மகிழ்ச்சி"யாம்...


మరింత సమాచారం తెలుసుకోండి: