பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷின் அம்மாவுமான ஏ.ஆர்.ரஹைனா தற்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.
இவர் தற்போது 'யோகி அண்ட் ஃபிரெண்ட்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதில் முதல் படமாக ''ஏண்டா தலைக்கு எண்ணெய் தேய்க்கல'' என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார்.
இதில் அசார் ஹீரோவாகவும், சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகின்றன. இந்த படத்தை தயாரித்து முடித்த பின், ஏ.ஆர்.ரஹைனா அடுத்து ஜிவி பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு திரைப்படத்தை தயாரிக்க போவதாக கூறப்படுகிறது.